சபரிமலையில் நவ.17 முதல் மண்டல கால பூஜை!. நவ.16ம் தேதி நடை திறப்பு!. புக்கிங் முழுவிபரம் இதோ!

sabarimala temple pti4118

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜைக்காக வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்பார்கள். மறுநாள் 17-ந்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள்.


நடப்பாண்டின் மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 14-ந்தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந்தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டு 17-ந்தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டு 19-ந்தேதி அடைக்கப்படும்.

நவ.29 வரை முன்பதிவு நிறைவு நவ., 16 முதல் 2026 ஜன., 10 வரை ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் நவ., 29- வரை முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆன்லைன் முன்பதிவில் 70 ஆயிரம் பேரும் ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் தங்குவதற்கான அறை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.onlinetdb.com என்ற இணையதளத்தில் பக்தர்கள் தங்க நினைக்கும் நாளிலிருந்து 15 நாட்கள் முன்னதாக நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு செய்ய முடியும். பக்தர் களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

Readmore: நாடே எதிர்பார்ப்பு!. பீகாரில் ஆட்சி அமைப்பது யார்?. இன்று வாக்கு எண்ணிக்கை!.

KOKILA

Next Post

மத்திய அரசு கொண்டு வந்த விதைகள் வரைவு மசோதா 2025...! டிசம்பர் 11-ம் தேதி கடைசி நாள்...!

Fri Nov 14 , 2025
விதைகள் வரைவு மசோதா 2025 குறித்த கருத்துகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் […]
kharif season farmers 11zon

You May Like