சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் அருணும் அவரது அம்மாவும் பேசிய வார்த்தைகளை கேட்டு சீதா கடும் கோபமடைகிறார். இதையடுத்து, மீனாவிடமும் முத்துவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு “இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
பின்னர், மீனாவின் அம்மா முத்துவிடம் மன்னிப்பு கேட்க, “அவ சின்னப் பொண்ணு… விடுங்க, பாத்துக்கலாம்” என்று சொல்லி முத்துவும் மீனாவும் அங்கிருந்து செல்கிறார்கள். இதற்கிடையே, கிரிஷின் பள்ளியிலிருந்து மனோஜுக்கு அழைப்பு வருகிறது. கிரிஷ் அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், சர்ட்டிபிகேட்டை மனோஜின் கையால் வாங்க வேண்டும் என்ற அவனின் ஆசையையும் ஆசிரியர் தெரிவிக்கிறார். இதைக் கேட்டு ரோகிணி மகிழ்ச்சி அடைகிறார்.
மனோஜும் ரோகிணியும் சேர்ந்து பள்ளிக்குச் சென்று கிரிஷுக்கு சர்ட்டிபிகேட் வழங்க முடிவு செய்கிறார்கள். பள்ளியில் மனோஜை பார்த்த முத்து குழப்பமடைகிறார். கிரிஷ் தான் அழைத்ததாக மனோஜ் சொல்ல, நிலைமையை மீனா சமாளிக்கிறார். பின்னர் வீட்டில் கிரிஷுடன் மனோஜ் வருவதை பார்த்த விஜயா கடும் கோபம் அடைகிறார். மனோஜ் நடந்ததை விளக்கி மன்னிப்பு கேட்கிறார். “இது கடைசி முறை” என விஜயா எச்சரிக்கை விடுக்கிறாள்..
இதற்கிடையே முத்துவும் மீனாவும் வீட்டிற்குள் வர, விஜயா மீண்டும் சண்டை போடுகிறார். குழந்தையிடம் இப்படி பேசக் கூடாது என்று முத்து கோபப்பட, அண்ணாமலை தலையிட்டு விஜயாவை கண்டிக்கிறார். இதற்கிடையில், கோவாவில் இருந்து ரவி வீடு திரும்புகிறார். அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து, தான் வென்ற கோப்பையையும் காட்டி குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறார்.
அடுத்து ரூமில் வந்து துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ரவி, தனது பேக்கில் இருந்து ஒரு பெண் பயன்படுத்தும் உடையை எடுக்கிறார். அதை பார்த்த ஸ்ருதி அதிர்ச்சியடைந்து, அது யாருடையது என்று கேட்க, “நீத்துவோடதாக இருக்கும்” என்று ரவி கூறுகிறார். இதைக் கேட்டு ஸ்ருதி கோபத்தில் இருக்கிறாள்.



