கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் 24 வயதான மணிகண்டன். இவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர், தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், வேலைக்காக மாயனூருக்கு சென்ற போது அங்கு வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி மணிகண்டன், தனது கள்ளக்காதலியுடன் வீட்டை விட்டு, வெளியேறியதால் மணிகண்டனின் தந்தை லாலாபேட்டை காவல் நிலையத்திலும், இளம்பெண்ணின் உறவினர்கள் மாயனூர் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். விசாரணையில், இருவரும் கடந்த 23ஆம் தேதி மாயனூர் காவல் நிலையத்தில் பிடிபட்டனர். மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால், இருவரையும் சேர்க்க முடியாது என போலீசார் அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதில் இருந்து வெறும் சில நாட்களிலேயே, நேற்றிரவு மாயனூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மணிகண்டன் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில், தலையில் அடிபட்டது போல இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு, அவரை கொலை செய்த குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலந்து சென்றனர்.
Read More : வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாட்டில் முதல்முறையாக கணக்கெடுப்பு பணி..!!