காதலர்களுக்காக எங்கள் கட்சி அலவலகங்கள் திறந்தே இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய போது “ தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் தனி ஏற்பாடு இல்லை.. எனவே தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகமாக இருந்தாலும் சரி, இடை கமிட்டி அலுவலகமாக இருந்தாலும் சரி, சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் கொள்வதற்கான இடமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. தோழர்கள் அனைவரும் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்..
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலவலகங்கள் திறந்தே இருக்கின்றன.. தைரியமாக காதலியுங்கள், காதலித்து வாங்க.. திருமணங்களை நடத்தி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்..” என்று தெரிவித்தார்..
மேலும் நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைக நடந்துள்ளன.. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு.. ஆனால் நிலை கைமீறி செல்கிறது.. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் இங்கு உள்ளது.. அதே சமயம், பொது சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான மனநிலை உள்ளது.. இந்த சூழலை அரசு, பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவைக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.. வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் சாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வரவும் அவர் தமிழக அரசை வலியுறுத்தினார்..
Read More : சொன்ன மாதிரியே ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பேஷண்டாக மாற்றிய இபிஎஸ்..! இதுக்கு யார் பொறுப்பு ? திமுக MLA கேள்வி..