மாஸான பஞ்ச் டயலாக், தெறிக்கவிடும் அக்ஷன் காட்சிகள்…! பட்டையை கிளப்பும் “வீர சிம்மா ரெட்டி” ட்ரைலர்

தெலுங்கு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் தனெக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இவரது நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர காத்திருக்கும் வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த பஞ்ச் டயலாக், ரத்தம் தெறிக்க அக்ஷன் காட்சிகள், தெறிக்கவிடும் நடனம் என ட்ரைலரில் மாஸ் காட்டி இருக்கிறார்.

Subscribe to my YouTube Channel

இந்த வீர சிம்மா ரெட்டி படத்தின் பர் ரிலீஸ் ஈவென்ட் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சங்கராந்தி பண்டிகைக்கு ஜனவரி 12ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், வீர சிம்மா ரெட்டியில் கன்னட நட்சத்திரம் துனியா விஜய்யும் வில்லனாக நடித்துள்ளார். ஹனி ரோஸ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் கர்ஜிக்க உதவுவார் என்று நம்புகிறார்.

Newsnation_Admin

Next Post

"பெண் காவலருக்கு பாலியல் தொல்லை" FIR வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள் - டிஜிபி சைலேந்திரபாபு

Sat Jan 7 , 2023
புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின்(Lift) இயக்கத்தை துவக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., மற்றும் தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஐ.பி.எஸ்., ஆகியோர் கலந்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, கடந்த ஒரு […]
DGP200

You May Like