ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் மத்தியில் , இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1,000 வீரர்களின் உடல்களை உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் 19 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார்.
எங்கள் தாயகத்தில் இறந்த வீரர்களுக்கு மரியாதை”- ரஷ்யா உணர்வுப்பூர்வ பதிவு: போர் சூழ்நிலையில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் இது ஒரு முக்கியமான படியாகும். இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிகாரி மெடின்ஸ்கி, “அவர்கள் தங்கள் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். இப்போது அவர்கள் தங்கள் தாயகத்தில் மரியாதையுடன் இளைப்பாறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சி போரின் ஆழமான வலியையும் அதன் பின்னணியில் உள்ள மனித உணர்வுகளையும் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் போரை ஒதுக்கி வைத்துவிட்டு, வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களை கௌரவிக்க முயற்சிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து உடல் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையேயான மிகப்பெரிய “வீரர்களின் உடல்கள் திரும்பப் பெறும்” செயல்முறையாக இது கருதப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த ஒப்பந்தம் நேரடி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தாக்குதல்கள் நின்றபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து உக்ரைன் அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றாலும், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு தற்காலிக நிவாரணமாக கருதப்படுகிறது.
Readmore: வீட்டில் பல்லிகள் தொல்லையா?. காபி தூள் இருந்தா போதும்!. ஈஸியா விரட்டிடலாம்!.