சோயா சங்க்ஸ் எனப்படும் சோயா பீன்ஸில் உடலுக்குத் தேவையான புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் பலருக்கு சோயா சங்க்ஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானது தானா? என்ற சந்தேகம் உள்ளது. இந்த பதிவில் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
சோயா சங்க்ஸ், சோயா பீன்ஸ் எனப்படும் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். கடலை பருப்பு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு போலவே இதிலும் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. 100 கிராம் சோயா பீன்ஸில் 20 முதல் 25 கிராம் புரதம் இருக்கிறது. இதுவே 100 கிராம் சோயா சங்க்ஸில் 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் இருக்கும் புரதச்சத்து காரணமாக சைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். ஏனெனில் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரோட்டீன் சத்து அதிகமாக கிடைப்பதில்லை. அதே நேரம் புரோட்டீன்கள் அசைவ உணவிலேயே அதிகம் நிறைந்து காணப்படுவதால், சைவ உணவு விரும்பிகளுக்கு புரோட்டீன் உணவுகள் குறைவாகவே உள்ளது.
சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் அதிக அளவு நன்மை இருந்தாலும், இந்த சோயா சார்ந்த உணவுகள் அவை தோன்றும் அளவுக்கு ஆரோக்கியமானவை அல்ல. உண்மையில், நன்மையை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குடல் மற்றும் ஹார்மோன் சுகாதார நிபுணரும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து பயிற்சியாளருமான தனிஷா பாவா தனது இன்ஸ்டா பக்கத்தில், சோயா நகட்ஸ் (soya nuggets) மற்றும் சோயா சாப் (soya chaap) போன்ற சோயா அடிப்படையிலான பொருட்கள் குறித்து உண்மை தகவல்களை பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அதாவது, இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்தப் பயன்படுத்தப்படும் “உயர் புரதம் (high-protein) என்ற லேபிள் உண்மையில் உங்களை ஏமாற்றுக்கிறது என்றும் அவற்றின் தீங்கு விளைவிக்கும் உடல்நல விளைவுகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் தனிஷா பாவா எச்சரிக்கிறார்.
சோயா துண்டுகள் நீங்கள் நினைப்பது போல் இல்லை: சோயா துண்டுகள், சோயா சாப் அல்லது சோயா பால் போன்ற சோயா பொருட்கள் பெரும்பாலும் புரதம் நிறைந்த சிற்றுண்டிகளாக தவறாகக் கருதப்படுகின்றன, ஆனால் உண்மையில் அவை ஜங்க் ஃபுட் உணவை விட மோசமானதாக இருக்கலாம் என்று தனிஷா குறிப்பிட்டுள்ளார். “இந்த சோயா துண்டுகள் உண்மையில் தொழில்துறை ரீதியாக பதப்படுத்தப்படுகின்றன. அவற்றில் 80 முதல் 90% சுத்திகரிக்கப்பட்ட மாவு உள்ளது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.” உயர்தர புரதம் என்று நம்பி நீங்கள் உட்கொள்ளும்போது, உண்மையில் அது வெறும் காலி கலோரிகளைக் குறைவாக மட்டுமே கொண்டிருக்கும்.”
உடல்நல பாதிப்புகள்: இது உங்கள் இரத்த சர்க்கரை சமநிலையை கடுமையாக சீர்குலைத்து, பரவலான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. சோயா துண்டுகள் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றும்,அவை ஊட்டச்சத்துக்களில் பயனுள்ளதாக இருக்காது; அதற்குப் பதிலாக, உங்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறுகிறார். “நான் எந்தவொரு வகையிலோ அல்லது முறையிலோ சோயாவை பரிந்துரைக்கவில்லை, ஏனெனில் இதில் ‘ஆண்டி-ந்யூட்ரியண்ட்கள்’ (anti-nutrients) உள்ளன. இவை முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.”
தனிஷா மிகவும் வலியுறுத்தி கூறுவதாவது, எந்தவொரு வகையிலும் சோயாவை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதற்கு மாற்றாக அதிகமாகச் சுத்தமான, ஆரோக்கியமான புரத மூலங்கள் கிடைக்கின்றன என்று கூறுகிறார்.
சிறந்த மற்றும் ஆரோக்கியமான புரத மாற்று உணவுகள்: முட்டை, மீன், இறைச்சி, பருப்புகள், பட்டாணி போன்ற பருப்புகள், முந்தரி மற்றும் விதைகள், பனீர் மற்றும் க்ரீக் தயிர், மிலெட், குஇனோவா போன்ற முழுமையான தானியங்கள் போன்றவை அதிகம் உண்மையான ஊட்டச்சத்துகளையும், சரிவிகிதமான புரதத்தையும் வழங்கும்.