மருத்துவ காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? இந்த தேதிக்குள் விண்ணப்பியுங்கள்..!!

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:

ஹோமியோபதி மருத்துவர் – 6

ஆயுர்வேத மருத்துவர் – 6

யுனானி மருத்துவர் – 1

யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் – 6

கல்வித் தகுதி:

B.H.M.S – Bachelor of Homeopathy and Surgery

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு 23 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.

சம்பள விவரம்: ரூ.15,800 முதல் ரூ.35,500 வரை வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவம்: www.simcoagri.com என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2023 மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச்சான்றிதழ். தொழில்நுட்ப தகுதிச்சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTHSTATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD. [SIMCO] டவுன் ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்- 632004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

CHELLA

Next Post

NEET PG 2023: இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி நீட்டிப்பு..!! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

Wed Feb 8 , 2023
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பயிற்சிக்கான கட் ஆப் தேதி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு வாரியம் (NBE) முதுநிலை நீட் (NEET-PG) 2023க்கான தேதிகளை வெளியிட்டது. இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதிகளையும் வெளியிட்டது. அந்தவகையில் தேர்வு மார்ச் 5ஆம் தேதியும், இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி மார்ச் 31ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 50% மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தகுதி நீக்கம் அடைய வாய்ப்புள்ளது […]
neet 1

You May Like