ரோகிணியால் வீட்டை விட்டு வெளியேறும் மீனா.. பாயிண்டை பிடித்த ஸ்ருதி..!! சிறகடிக்க ஆசை அப்டேட்..

siragadika aasai 3

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், வீட்டில் இருப்பவர்களிடம் உண்மையை மறைக்க மனமில்லாத மீனா, வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் மீனாவை தேடுகிறார். அப்போது அவள் வீட்டை விட்டு சென்றுவிட்ட விஷயத்தை அனைவரும் கூறுகிறார்கள். இப்படி குடித்துவிட்டு வந்தால் உன்கூட யாரு வாழ்வா என விஜயாவும் திட்டுகிறார்.


பின்னர் அண்ணாமலையிடம் என்ன நடந்தது என முத்து கேட்கிறார். அதற்கு அவர், நீ குடியை விட்டால் தான் திரும்பி இந்த வீட்டுக்குள் வருவேன் என சொல்லிவிட்டு மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார். இவன் குடியெல்லாம் நிறுத்த மாட்டான், அவளும் இந்த வீட்டுக்கு வரமாட்டா, அதனால் நிம்மதியா இருக்கலாம் என விஜயா சொல்ல, அதற்கு அண்ணாமலை டென்ஷன் ஆகிறார்.

பின்னர் ஸ்ருதி, முத்து குடிப்பது புதுசில்ல, ஆனால் அதை ஒரு காரணமாக வச்சிட்டு மீனா சென்றதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேறு ஏதோ ஒரு விஷயம் இருக்கு என சொல்கிறார். மீனா வீட்டை விட்டு கிளம்பியதால் ரோகிணி ஒரு பக்கம் நிம்மதி அடைய, மறுபுறம் வீட்டு வேளையெல்லாம் இனி வீட்டு வேலையெல்லாம் ரோகிணி தான் செய்ய வேண்டும் என்கிற சூழல் வருகிறது.

அனைத்து வேளைகளையும் ரோகிணி செய்வதை பார்த்த முத்து, இனி மீனா வீட்டுக்கு வரவே கூடாதுனு முடிவு பண்ணிட்டீங்களா என கேட்கிறார். இதையடுத்து என்ன ஆனது? மீனாவை சமாதானப்படுத்தி முத்து மீண்டும் அழைத்து வந்தாரா? உண்மை அனைவருக்கும் தெரிய வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Read more: நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? மோடியிடம் இபிஎஸ் இதை கேட்பாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

English Summary

Meena leaves the house because of Rohini.. Shruti catches the point..!! siragadika aasai update..

Next Post

சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் ஓட்டம்.. சோகத்தில் மூழ்கிய மணமகன்..!! இப்படியா நடக்கனும்..?

Mon Nov 24 , 2025
The bride runs away while tying the talisman in a cinematic style.. The groom is overwhelmed with sadness..!!
marriage2 1735301460

You May Like