விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், செல்வத்தின் ஐடியா படி சாமியாரிடம் சென்று கயிறு கட்ட முத்து மீனாவை அழைத்து செல்கிறான். பெண் சாமியார் மீனாவின் கையை பிடித்து பார்த்ததில், ஏதோ ஒரு உண்மையை மறைத்து வைத்து சொல்லமுடியாமல் குற்ற உணர்ச்சிய்ல் தவித்து வருகிறாய் என்று கூறி, கயிறு கட்டுகிறார்.
அந்த சமயம் அங்கு வந்த சிந்தாமணி மீனாவிடம் வம்பிழுக்க, இருவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். பிறகு அந்த பெண் சாமியாரிடம் தனது மகளுக்கு திருமணம் செய்வது குறித்து கூறுகிறார். அதற்கு சாமியார் உனது மகளுக்கு திருமணம் நடக்கும் ஆனால் உன் சம்மதப்படி நடக்காது என்று கூறவே, சிந்தாமணி அதிர்ச்சியில் உறைகிறார். இந்த பிரச்சனையில் நீங்களோ உங்களது கணவரோ ஜெயிலுக்கு செல்லும் சூழல் கூட ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா என சிந்தாமணி கேட்க, விதியை யாராலும் மாற்றமுடியாது என்று தெரிவித்தார். உடனே சுதாரித்து கொண்ட சிந்தாமணி இனி தனது மகளை எந்த பையனுடன் பேசவிடக்கூடாது என்று திட்டம் தீட்டுகிறார். பிறகு வீட்டிற்கு சென்ற மீனா, மீண்டும் உண்மையை சொல்லமுடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்க, முத்துவோ துருவி துருவி கேள்வி கேட்கிறான்.
உடனே மீனா அழ முத்து என்னாச்சு என்று கேட்க மீனா மொத்த உண்மையையும் சொல்லிவிடுகிறாள். நாம நினைக்கிற மாதிரி ரோகிணி இல்ல, அவ உண்மையான பேரு கல்யாணி, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு.. அவ தான் கிரிஷ்ஷோட அம்மானு சொல்கிறார். இதனை கேட்ட முத்து அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Read more: உணவில் இந்த 3 எளிய மாற்றங்களை செய்தால்.. 10 ஆண்டுகள் அதிகமாக வாழலாம்.. புற்றுநோய் நிபுணர் அட்வைஸ்..!



