விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ரோகிணி தொடர்ந்து தனது குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறார். கிரிஷ் படிக்கும் பள்ளிக்கு மனோஜ் செல்லாமல் இருக்க ரோகிணி சதி திட்டமிட்டார். மனோஜின் நண்பர் அந்த பள்ளிக்கு சென்று போட்டோக்களை எடுத்து வந்தார்.
ஆனால், கிரிஷ் இருக்கும் புகைப்படம் மனோஜிடம் போய் சேரக்கூடாது என்று கவலைப்பட்ட ரோகிணி, அந்த புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் கிழித்து விட்டார். அதே நேரத்தில் அருண், முத்துவைப் பற்றி தவறாக பேசி சீதாவிடம் குழப்பம் உண்டாக்குகிறார். இதனால் சீதா, அருணின் வார்த்தைகளை நம்பி, கோபமாக மீனாவிடம் தனியாக சந்திக்க அழைக்கிறார். இதன் மூலம் சீதா – மீனா இடையே புதிய பிரச்சனை உருவாக இருக்கிறது.
இதற்கிடையில், விஜயா சமையலறைக்கு சென்றபோது உணவு தயாராக இல்லை என்று கவலைப்பட்டார். தூங்கிக் கொண்டிருந்த மீனாவைப் பார்த்ததும் கடும் கோபம் அடைந்து, அவர்மேல் தண்ணீர் ஊற்றுகிறார். இதைக் கண்ட முத்து, விஜயாவை அடிக்கக் கூடும் நிலைமைக்கு வருகிறார். ஆனால், “அம்மாவாகி விட்டவர்” என்ற கோபத்தில் சண்டை மட்டும் போடுகிறார்.
இத்தனை அவமானங்களுக்கும் நடுவில், வீட்டை விட்டு செல்லாமல் அங்கேயே தங்கி இருப்பதால், மீனாவுக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாமல், வேலைக்காரி போலவே நடத்தப்படுகிறார். முத்து அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
Read more: உலகையே வியக்க வைத்த இந்தியாவின் பணக்கான பிச்சைக்காரர்.. சொத்து மதிப்பை கேட்டால் அசந்தே போவீர்கள்..!!