இன்றைய இளம் தலைமுறையில் மலட்டுத்தன்மை ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இது பெண்களுக்கே அல்ல, ஆண்களிடமும் அதிகமாகக் காணப்படுகிறது. உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம், மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற காரணிகள் ஆண்களின் விந்தணு தரத்தையும் எண்ணிக்கையையும் குறைத்து, கருவுறுதலை பாதிக்கின்றன என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய சூழலில், இயற்கையாகவே விந்தணுக்களின் தரத்தையும் ஆண்மை சக்தியையும் மேம்படுத்தும் ஒரு பழம் கிவி (Kiwi) என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இந்த சிறிய கிவி பழம் வைட்டமின் சி-யின் மிகச் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. ஒரு கிவி பழத்தில், ஆரஞ்சு அல்லது ஆப்பிள் போன்ற பழங்களைவிட மூன்று மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆண்களில் கருவுறுதலை மேம்படுத்தவும் பெரும் பங்கு வகிக்கிறது.
கிவி பழத்தில் உள்ள துத்தநாகம் (Zinc), ஃபோலேட் (Folate), கால்சியம் (Calcium) போன்ற தாதுக்கள் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவைக் கூடுதலாக உயர்த்துகின்றன. இதன் மூலம் ஆண்மை, சக்தி, மற்றும் கருவுறும் திறன் இயற்கையாகவே மேம்படுகிறது.
விந்தணு உற்பத்தி மற்றும் இயக்கத்தில் கிவியின் பங்கு: கிவியில் காணப்படும் ஆக்டினிடின் (Actinidin), வைட்டமின் E, துத்தநாகம் ஆகியவை விந்தணுக்களின் உற்பத்தியை மட்டுமின்றி, அவற்றின் இயக்க வேகத்தையும் அதிகரிக்கின்றன. இதனால் விந்தணுக்கள் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருந்து, கர்ப்பம் அடையும் வாய்ப்பு பெரிதும் அதிகரிக்கிறது.
NCBI ஆராய்ச்சி என்ன சொல்கிறது? அமெரிக்காவின் தேசிய உயிரியல் தகவல் மையமான NCBI வெளியிட்ட ஆராய்ச்சியின் படி, விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துவதில் ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) முக்கிய பங்கு வகிக்கின்றன. கிவி பழம் இந்த ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகும். இதை தொடர்ந்து உண்ணுவது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை (Free Radicals) குறைத்து, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்துகிறது.
மனஅழுத்தம் (Stress) என்பது ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று. கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, மனஅழுத்தத்தைக் குறைத்து ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால் ஆண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிலும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு கிவி பழங்களைச் சாப்பிடுவது, ஆண்களில் விந்தணு தரம், டெஸ்டோஸ்டிரோன் அளவு மற்றும் மன அமைதியை மேம்படுத்தும். இருப்பினும், உடல் நல குறைபாடுகள் அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்பவர்கள் தங்கள் உணவில் மாற்றம் செய்யும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read more: பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் இல்லை.. திடீரென அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா!