தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் அரிசிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில், உடல் வலிமைக்கும் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு ரகமாக ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசி திகழ்கிறது. இந்த அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம் : சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி, வெறும் உணவாக மட்டுமல்லாமல் ஒரு மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. இதில் உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. குறிப்பாக, இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குவதுடன், உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
ஆண்களுக்கான தனிச்சிறப்பு : இந்த அரிசிக்கு ‘மாப்பிள்ளை சம்பா’ என்று பெயர் வந்ததற்கே ஒரு சுவாரசியமான காரணம் உண்டு. பழங்காலத்தில் இளைஞர்கள் இளவட்டக் கல்லைத் தூக்கித் தங்கள் வீரத்தை நிரூபிப்பதற்காக, அவர்களுக்கு உடல் வலுவைத் தரும் இந்த அரிசி உணவாக வழங்கப்பட்டது. இன்றும், உடல் பலம் குறைவாக உணரும் ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவாக இது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மிக முக்கியமான சிறப்பே ஆண்களின் ஆண்மையைப் பலப்படுத்துவதுதான்.
நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் வலுவும் : தினமும் மாப்பிள்ளை சம்பா அரிசியைச் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக கிடைக்கிறது. இது தசைகளுக்கு நல்ல வலுவைத் தந்து, உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. திருமண வயதில் உள்ள இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பை செலுத்தும் ஆண்களுக்கு இந்த அரிசி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.



