கையில் கட்டுடன் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன்.. ஓடோடி சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

Duraimurugan Stalin

உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்..

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான துரைமுருகன் தற்போது 87 வயதாகிறது.. வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் வீடு திரும்புவதும் வழக்கமாகி வருகிறது.. கடந்த மே மாதம் நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..


அதே போல் கடந்த ஜூன் மாதம் காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.. இதை தொடர்ந்து அவர் உடல் நிலை சீராக இருந்ததால் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தார்..

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.. அப்போது அமைச்சர் எ.வ வேலுவும் உடனிருந்தார்.. துரைமுருகன் கையில் கட்டுடன் இருப்பதும், அவரை முதல்வர் சந்தித்து பேசுவதும் போன்ற போட்டோ வெளியாகி உள்ளது..

Read More : இப்ப தான் சந்தேகம் அதிகமாகுது.. “நியாமான தேர்தல்னா இதை செய்திருக்கலாமே..” தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய 7 கேள்விகள்..

RUPA

Next Post

இறந்த மனைவியின் உடலை பைக்கில் கொண்டு சென்ற கணவர்.. வைரலான வீடியோ.. AI உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய நபர் கைது!

Mon Aug 18 , 2025
லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]
man carries dead wife body viral video

You May Like