அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கு.. காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

12675699 duraimurugan

2006-2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1 கோடி 40 லட்சம் சொத்து சேர்த்ததாக கூறி 2011ம் ஆண்டு ஊழல் தடுப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி சாந்தகுமாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் வழக்கில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.


இதை எதிர்த்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வேலூர் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.. கடந்த 2024-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி இதுபோன்ற வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு தான் மாற்ற வேண்டும்.. அதன்படி இந்த வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..

இதையடுத்து இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து அமைச்சர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது துரைமுருகன் தரப்பு, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது என்று தெரிவிக்கப்பட்டது..

இந்த வழக்கு விசாரணையை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன் என்பது குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.. மேலும் வழக்கு விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More :  TNPSC Group 4: இளைஞர்களே.. வெளியானது TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்..! எப்படி அறிவது..?

RUPA

Next Post

வரதட்சணை கொடுமை..!! திடீரென மயங்கி விழுந்த மனைவி..!! துடிதுடித்து உயிரிழந்ததை பார்த்து ரசித்த கணவன், மாமியார்..!!

Wed Oct 22 , 2025
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வந்த தொழிலதிபர் மஹானா என்பவருக்கும், டெல்லியை சேர்ந்த 25 வயதான நிகிதாவுக்கும் கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, மஹானா லக்னோவில் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். இதன் காரணமாக, அவர் தனது மனைவி நிகிதாவிடம் ரூ.15 லட்சம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மஹானாவின் தாயாரும் வரதட்சணை கேட்டு […]
Dowry 2025

You May Like