அமைச்சர் ஆர். காந்திக்கு தீவிர உடல்நலக் குறைவு..!! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை..!! வெளியாகிறது மருத்துவ அறிக்கை..!! என்ன ஆச்சு..?

R Gandhi 2025

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமைச்சரும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவருமான ஆர். காந்தி, நேற்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை குறித்த முழு விவரம் உடனடியாக தெரியாத நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அமைச்சர் ஆர். காந்தி தற்போது நலமாக இருக்கிறார் என்றும், அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஆர். காந்தி, திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1996, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக் கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : கனமழை எதிரொலி… இன்று பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

CHELLA

Next Post

திடீரென கூடிய கூட்டத்தால் இடிந்து விழுந்த சுரங்கத்தின் பாலம்..!! 32 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!! பதபதைக்கும் வீடியோ உள்ளே..!!

Mon Nov 17 , 2025
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான தாமிரம் மற்றும் கோபால்ட் சுரங்கத்தில், அதிக எடையை தாங்க முடியாமல் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 32 முதல் 40 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் லூலபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத்தில் நிகழ்ந்தது. லூலபா மாகாணத்தின் உள்துறை அமைச்சர் ராய் கவும்பா மயோண்டே இது குறித்து பேசுகையில், கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு […]
Congo Mine 2025

You May Like