குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், 3 வயது சிறுமி ஒருவர் கார் மோதி இழுத்துச் செல்லப்பட்டும் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். காரை ஓட்டியதும், ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒரு டீனேஜ் சிறுவன் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் புதன்கிழமை நடைபெற்ற நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலர் போக்குவரத்து விதிகளை மீறிய இந்த மோசமான செயலை கண்டித்து வருகின்றனர்.. கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்..
எனினும் ஒரு பயனர், “கடவுள் காக்க நினைத்தால் யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்..
வீடியோவில், சிறுமி தனது வீட்டின் அருகிலுள்ள சாலையில் நடந்து செல்லும் போது, எண் பலகை இல்லாத ஒரு வேகமான கார் திடீரென திருப்பத்தில் இருந்து வந்து அவளை மோதும் காட்சியை பார்க்க முடிகிறது… கார் சிறுமியை ஒரு குறுகிய தூரம் இழுத்துச் சென்ற பிறகு, அருகிலிருந்தவர்கள் அலாரம் எழுப்பியதால் வண்டி நின்றது. ஆனால், சிறுமி காரின் அடியில் இருந்து எந்த காயமும் இல்லாமல் எழுந்து நிற்பது காட்சியில் தெளிவாக தெரிகிறது.
அகமதாபாத் போலீசார் கார் உரிமையாளர் மற்றும் கார் ஓட்டிய சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எண் பலகை இல்லாத வாகனம் சாலையில் ஓட அனுமதித்தது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவன் வாகனம் ஓட்டியது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
Read More : செங்கோட்டை குண்டுவெடிப்பு.. அறுவை சிகிச்சை நிபுணர் கைது; விசாரணை வளையத்தில் அல்-ஃபலா பல்கலைக்கழகம்!



