துபாயில் இந்தியாவுக்கு எதிரான 2025 ஆசியக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் சைகை செய்த தவறால், பாகிஸ்தான் அணியை ஐசிசி தடை செய்ய வாய்ப்புள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப், இந்திய வீரர்களை நோக்கி “6-0” என்ற சைகை செய்தார். இது, இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் எனப்படும் விமான தாக்குதலின் போது, 6 ரபேல் விமானங்களை “செயலிழக்கச் செய்ததாக பாகிஸ்தான் கூறிவருவதை குறிப்பதாக இருந்தது.
அதாவது, இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃபை, கோலி, கோலி என்று முழக்கமிட்டு கேலி செய்தனர். இது, 2022 T20 உலகக்கோப்பை போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலை அவரின் கடுமையாக பந்துகளை அடித்ததை நினைவுபடுத்தியது.
அதுமட்டுமின்றி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பை 2025 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு சாஹிப்சாதா ஃபர்ஹான் தனது பேட்டால் துப்பாக்கிச் சூடு செய்வது போன்ற சைகையை செய்தார். அதன் பிறகு, சாஹிப்சாதாவை ஐசிசி கண்டித்தது, அதே நேரத்தில் ரவூஃப்க்கு தனது போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் வீரர்களின் சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியினரும் அந்த சைகைகளை மீண்டும் செய்தனர். கொழும்பில் நடந்த SAFF U17 சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு எதிராக இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட கால்பந்து அணியுனர் “ரஃபேல்” மற்றும் “தேநீர் அருந்தும்” சைகையை செய்தனர்.
இந்தப் போக்கு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களால் மைதானம் முழுவதும் தொடர்கிறது. இதற்கிடையில், ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு U-19 மகளிர் கிரிக்கெட் போட்டி முடிவில், பாகிஸ்தான் பெண்கள் அணி வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் விமானம் விழுவது போல் சைகை செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது. பர்ப்பிள் (purple) யூனிபார்ம் அணிந்த பாகிஸ்தான் இளைய பெண்கள் அணி ஒரு கோப்பையுடன் அமர்ந்திருந்தனர். அப்பொழுது இரண்டு இளம் வீராங்கனைகள், தங்கள் பேட்-ஐ துப்பாக்கி போல பிடித்துக்கொண்டு இராணுவ பாணியில் நகர்ந்து சென்றனர்.
தொடர்ந்து இருவரும் ஷாட் எடுப்பது போல் சைகை செய்தனர், உடனடியாக, கோப்பையுடன் அமர்ந்திருந்த அனைத்து வீரர்களும் தரையில் விழுந்து, அடிபட்டது போல் நடித்தனர். இந்த சைகை சமூக ஊடக தளங்களில் விரைவாக வைரலானது. தற்போது, 19 வயதுக்குட்பட்ட வீரர்களின் செயலின் அர்த்தம் மற்றும் தாக்கங்கள் மற்றும் அவர்கள் என்ன செய்தியை அனுப்ப விரும்புகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணி, , உள்நாட்டில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதற்குத் தீர்மானித்தது. ஆனால், ஆரம்பத்தில் சிறிய பின்னடைவுக்கு ஆளானது. அப்துல்லா ஷஃபீக், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவால் வெளியேற்றப்பட்டார்.
ஆனால், இமாம்-உல்-ஹக் மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோர், இரண்டாவது விக்கெட்டுக்காக உறுதியான சதம் அடித்து இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். இரு அணிகளுக்கும் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 சுழற்சியின் தொடக்க டெஸ்டில் பாகிஸ்தான் ஆட்டத்தை கட்டுப்படுத்த அவர்களின் பார்ட்னர்ஷிப் உதவியது. தற்போது, லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் புரோட்டியாஸ் அணிக்கு எதிராக அவர்களின் ஸ்கோர் 200/5 ஆக உள்ளது.