திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று திமுகவின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடைபெற்றது.. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் திமுகவில் இணைந்தார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் திமுகவில் இணைந்துள்ளார்.. முன்னதாக அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருந்தார்..
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இருந்தார்.. இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர்.. ஆனால் அவருக்கு கடந்த 2021 தேர்தலில் அதிமுக சார்பில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.. மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் ஆதரவாளர் செந்தில்குமாருக்கு சீட் ஒதுக்கப்பட்டது.. இதனால் நிலோபர் அஜிமுக்கும், கே.சி. வீரமணிக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் அவர்களின் ஆதரவாளர்களிடையே சலசலபு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த 2021-ம் ஆண்டு நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். எனினும் அவருக்கு பெரிதளவு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் பெயரளவில் கட்சி கூட்டங்களில் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : “ஸ்டாப் என சொல்லும் வரைக்கும் நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் இபிஎஸ்..” பங்கம் செய்த ஸ்டாலின்..!


