ஆன்லைன் ஷாப்பிங் செய்தலால் பெரும்பாலான மக்கள் தங்களது தேவையான பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் சிறப்பு விற்பனை காலத்தில்தான் விலை உயர்ந்த பொருட்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிடுகிறார்கள். இந்தத் தருணத்தில், Flipkart நிறுவனம் ‘GOAT Sale’ எனும் சிறப்பு விற்பனையை ஜூலை 12 முதல் ஜூலை 17 வரை நடத்தி வருகிறது.
அமேசானில் நடைபெற்ற பிரைம் டே விற்பனையின் பிறகு, இந்திய ஆன்லைன் சந்தையில் போட்டியை முன்னெடுக்கும் வகையில், பிளிப்கார்டும் தனது ‘Greatest of All Time’ (GOAT) விற்பனையை அறிவித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த விற்பனையில், மொபைல்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், ஏ.சி., ஃபிரிட்ஜ், ஆடைகள், ஷூஸ் உள்ளிட்ட பிரிமியம் வகை பொருட்கள் வரலாறு காணாத அளவிலான தள்ளுபடியில் வழங்கப்படுகின்றன.
Samsung galaxy S24 தள்ளுபடிக்கு பிறகு 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும். HP மடிக்கணினிகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம். Flipkart நிறுவனத்தின் தகவலின்படி, GOAT விற்பனையின் போது Axis Bank, HDFC Bank, IDFC First வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அதிரடி சலுகை நாளையுடன் முடிவடையும் நிலையில் உங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளுங்கள்.
Read more: குடையை ரெடியா மக்களே..? இன்று மாலை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!! – வானிலை ஆய்வு மையம்