கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்ற புதுச்சேரி தமிழச்சியான சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் தன் நிறந்தை வைத்தே அதுவும் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் தான் புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல்.
கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து மாடலிங் துறையில் கலக்கி வந்தார். தனது சொந்த ஊரிலேயே பல கேளிக்கைகளை எதிர்கொண்ட ரேச்சல் அந்த பெயரை கொண்டே மிஸ் பாண்டிச்சேரி பட்டத்தை வென்றது தனக்கு கிடைத்த பெருமை என கூறியுள்ளார்.
இந்த நிலையில் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்ற புதுச்சேரி தமிழச்சியான சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருகு வயது 26. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திறமைக்கு ஆர்வம் மட்டுமே போதும். நிறம் தேவை இல்லை என்னை தவறாக பேசும் அந்த ஒரு சிலருக்கு என்னுடைய வெற்றியே சிறந்த பதிலாக இருக்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து காட்ட வேண்டும் அவர்களுக்கு நிறம் ஒரு தடையாக இருக்க கூடாது மேலும் நான் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று முன்னுதாரணமாக இருந்த ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read more: 51 வயதிலும் இளமையா இருக்கும் விஜய்.. ஃபிட்னஸ் சீக்ரெட்டை சொன்ன தாய் ஷோபா..!!