விற்பனைக்கு வருகிறது ’மோடி மாம்பழம்’..!! அப்படி என்ன ஸ்பெஷல்..!! விலை எவ்வளவு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மலிஹாபாத்தைச் சேர்ந்தவர் உபேந்திரா சிங். மாம்பழ ஆராய்ச்சியாளரான இவர், பலவிதமான மாம்பழங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அதிலொரு மாம்பழ வகை, பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு பகுதியை நினைவுபடுத்தி இருக்கிறது. உடனடியாக அந்த மாம்பழ வகைக்கு மோடியின் பெயரை வைக்கத் தூண்டப்பட்டிருக்கிறார் உபேந்திரா சிங்.

mango online delivery 750x430 1

இதையடுத்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த ரகத்தை பதிவு செய்து ஒப்படைத்துள்ளார். அந்த மாம்பழத்தை ஆய்வகத்தில் இருந்தவர்களும் சுவைத்தபார்க்கவே, அதன் சுவை மிக வித்தியாசமாக இருந்ததாகவும், பின் அவர்கள் கூடி ஆலோசித்து இதற்கு மோடி என பெயரிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மோடி மாம்பழம் என்ற பெயரில் அதை பதிவு செய்த சான்றிதழை வழங்கியுள்ளது வேளாண் ஆராய்ச்சி கவுன்சில். மோடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மாம்பழத்தில் லக்னோவின் மாம்பழப் பகுதியான மலிஹாபாத்தில் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே, நார்ச்சத்தை விட அதிக கூழ் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

மோடி மாம்பழம் எப்படி உருவானது..?

லக்னோவின் இரண்டு உள்ளூர் மாம்பழ வகைகளை இணைத்து இந்த ரக மாம்பழங்களை உருவாக்கியதாக சிங் கூறியுள்ளார். இந்த மாம்பழம் சராசரியாக 450 கிராம் எடை இருக்குமென சொல்லப்படுகிறது. 2019ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த ‘பழங்களின் அரசன்’ என்ற கண்காட்சியில் இந்த மாம்பழம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அது அப்போது சந்தை விற்பனைக்கு வரவில்லை. இந்நிலையில், இது அடுத்தாண்டு சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சந்தைக்கு வரும்போது, சந்தையில் தற்போது உள்ள மாம்பழங்களை விட இது பன்மடங்கு அதிக விலை கொண்டிருக்கும் என உபேந்தரா சிங் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2023 05 22 at 1.33.39 PM

இந்த மோடி மாம்பழங்களின் 1,000 மரக்கன்றுகள் தற்போது விற்பனைக்கு தயாராக இருப்பதாக உபேந்திரா சிங் தெரிவித்துள்ளார். அவை ஒவ்வொன்றின் விலையும் ரூ. 1,000-த்துக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘இந்த மா மரக்கன்றுகள் வருங்காலத்தில் இன்னும் அதிகம் விற்பனை செய்யப்படும். இந்தியாவின் மூலை முடுக்கிலும் அது விற்பனைக்கு செல்லும்’ என்றும் கூறியுள்ளார்.

CHELLA

Next Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கேப்டன் மில்லர்..!! படக்குழு மீது தனுஷ் கடும் அதிருப்தி..!!

Mon May 22 , 2023
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாகி […]
Dhanush 2

You May Like