மருமகளின் செயலால் ஆடிப்போன மாமியார்..!! அதிகாலையில் கண்ட காட்சி..!! கள்ளக்காதலனுடன் காட்டுக்குள் கிடந்த உடல்..!!

Love 2025

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக திருமண வாழ்வில் உள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். குழந்தைகளின் கல்விக்காக இவர்கள் தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், காளப்பநாயக்கன்பட்டி அருகே புளியங்காடு பகுதியில் வசித்து வந்த டிரைவர் அஜித் (22) என்பவருடன் சினேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து காளிமுத்து அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்து சமாதானம் பேசி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். சமாதானத்திற்குப் பிறகு, சினேகா தனது குழந்தைகளுடன் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியில் இருக்கும் கணவரின் தங்கை பரிமளாவின் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், திருநள்ளாறு கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய காளிமுத்துவின் குடும்பத்தினர், நேற்று முள்ளுக்குறிச்சியில் உள்ள பரிமளாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அப்போது, சினேகாவின் மாமியார் ஜானகி வந்து பார்த்தபோது அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், மீண்டும் அதிகாலை 4 மணியளவில் வந்து பார்த்தபோது, சினேகா தான் அணிந்திருந்த தாலிக்கொடியைக் கழற்றி வைத்துவிட்டு வீட்டிலிருந்து மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தேடியபோது, ராசிபுரம் அருகே உள்ள காட்டில் சினேகாவும், அவரது கள்ளக்காதலன் அஜித் இருவரும் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்தனர். பூ பறிக்கச் சென்ற அஜித்தின் தந்தை கந்தசாமி, தனது மகனுடன் ஒரு பெண் விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : இவர்கள் முருங்கைக்காயை தொட்டால் ஆபத்து..!! உஷாரா இருங்க..!! இல்லைனா பிரச்சனை தீவிரமாகிவிடும்..!!

CHELLA

Next Post

கூட்டணி அழைப்பு விடுத்த அதிமுக.. சஸ்பென்ஸ் வைக்கும் பிரேமலதா விஜயகாந்த்..!! பரபரக்கும் அரசியல் களம்..

Tue Oct 14 , 2025
AIADMK calls again.. Premalatha Vijayakanth creates suspense..!!
Premalatha Eps 2025

You May Like