தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தை சேர்ந்தவரும், செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞருமான முத்துக்குமாரசாமி (46), பகல் நேரத்தில் தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரசாமி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். போலீஸ் விசாரணையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இந்தச் சூழலில், உடல்நலமின்றி இருந்த சிவசுப்பிரமணியத்தின் மகள் திடீரென உயிரிழந்தார். மகள் இறந்த துக்கத்தில் இருந்த சிவசுப்பிரமணியனின் மனைவியை, வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி தொடர்ந்து உறவுக்காக அழைத்துப் பலமுறை டார்ச்சர் செய்துள்ளார்.
“மகனைப் பறிகொடுத்துவிட்டு வேதனையில் இருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று சிவசுப்பிரமணியத்தின் மனைவி பலமுறை மறுத்துள்ளார். ஆனாலும், முத்துக்குமாரசாமி தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்து வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், நடந்த அனைத்து விஷயங்களையும் தன் கணவர் சிவசுப்பிரமணியத்திடம் கூறி அழுதுள்ளார்.
மனைவிக்கு நேர்ந்த துயரத்தை அறிந்த சிவசுப்பிரமணியம் கடும் கோபமடைந்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த அவர், அரிவாளை எடுத்துக்கொண்டு தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியின் அலுவலகத்திற்குச் சென்று, பட்டப்பகலில் அவரை வெட்டிக் கொலை செய்தார்.
கொலை செய்த பிறகு சிவசுப்பிரமணியன் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி, கேரளா மாநிலத்திற்கு சென்று தலைமறைவாகிவிட்டார். தென்காசி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சிவசுப்பிரமணியத்தை கைது செய்வதற்காக கேரளாவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



