தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தனது 3 வயது குழந்தையை பெற்ற தாய் கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெதக் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் (33) மற்றும் அவரது மனைவி மம்தா (26) ஆகியோருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மம்தா தனது மகன் சரண் (4) மற்றும் மகள் தனுஸ்ரீ (3) ஆகியோருடன் சப்ஷாபள்ளி கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் மம்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மகனை பெற்றோரிடம் விட்டுவிட்டு, மகள் மற்றும் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் மம்தா. இதனையறிந்த கணவர் பாஸ்கர், சிவம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அங்கு விரைந்து இருவரையும் பிடித்தனர். ஆனால், அவர்களுடன் மம்தாவின் குழந்தை இல்லை.
குழந்தை குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் வெளியானது. தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால், இருவரும் சேர்ந்து குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று, குழி தோண்டி புதைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, மம்தா காண்பித்த இடத்தில் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மம்தா மற்றும் கள்ளக்காதலன் பயாஸை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Read More : வாட்ஸ் அப்பில் வந்த அசத்தலான அப்டேட்..!! AI செய்யும் மாயாஜாலம்..!! இனி வீடியோ காலை இப்படியும் மாற்றலாம்..!!