இந்தியாவிலேயே மும்பை தான் வீடு வாங்க அல்லது வாடகைக்கு மிகவும் விலை உயர்ந்த நகரம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அர்பன் லேண்ட் இன்ஸ்டிட்யூட் (யுஎல்ஐ) சமீபத்திய அறிக்கையின்படி, தனியார் வீடுகளை வாடகைக்கு எடுப்பதற்கும், வாங்குவதற்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் விலையுயர்ந்த நகரமாக ஹாங்காங்கை சிங்கப்பூர் முந்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் சராசரி விலை $1.2 மில்லியனை எட்டியது, ஹாங்காங்கின் சராசரி விலையான $1.16 மில்லியனைத் தாண்டியது. ULI அறிக்கையில் பல்வேறு இந்திய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சந்தை பற்றிய தகவல்களும் உள்ளன.
இந்தியாவில், மும்பையில் ஒரு சதுர மீட்டருக்கு சராசரி வீட்டு விலை $3,383 (ரூ.2,78,466 ), அதே சமயம் டெல்லி NCR $1,358 (ரூ 1,11,781) இல் பின்தங்கி உள்ளது. சராசரி குடும்ப வருமானத்தின் அடிப்படையில் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வீட்டு விலைகள் ஒப்பீட்டளவில் மலிவாக உள்ளதாக கூறப்படுகிரது.