மும்பை பள்ளி ஆசிரியை 16 வயது மாணவனை தன்னுடன் உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் உள்ள ஒரு பிரபல பள்ளியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஆசிரியை, தனது 16 வயது மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தற்காக கைது செய்யப்பட்டார். அந்தப் பெண், மைனர் சிறுவனை மும்பையில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் சென்று, குடிக்க வைத்து, பதட்ட எதிர்ப்பு மாத்திரைகளையும் கொடுத்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியை ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் நடத்தையில் மாற்றத்தை குடும்பத்தினர் கவனிக்கத் தொடங்கிய பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போதுதான் அந்த மாணவர் தனது குடும்பத்தினரிடம் ஆசிரியையின் துஷ்பிரயோகம் பற்றி கூறினார். ஆசிரியை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பாலியல் வன்கொடுமை குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கும் ஆசிரியை, டிசம்பர் 2023 இல் பள்ளியின் ஆண்டு விழாவிற்காக நடனக் குழுக்கள் தொடர்பாக சிறுவனை சந்தித்துள்ளார். அப்போது சிறுவனால் ஈர்க்கப்பட்ட அந்த ஆசிரியை ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது முதல் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த மாணவன் ஆரம்பத்தில் தயங்கி ஆசிரியரைத் தவிர்க்கத் தொடங்கி உள்ளார். இருப்பினும், வயதான பெண்களுக்கும் டீனேஜ் சிறுவர்களுக்கும் இடையிலான உறவுகள் இப்போதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டதாகக் கூறி உள்ளார். மேலும் அந்த சிறுவனின் பெண் தோழியை வைத்து தனது உறவை ஆசிரியைஇ ஏற்றுக்கொள்ள செய்தார்.
ஒருவருக்காக ஒருவர் படைக்கப்படவர்கள் என்று அந்த பெண் தோழியும் கூறி மாணவனை நம்ப வைத்துள்ளார். வயதான பெண்களுக்கும் டீனேஜ் சிறுவர்களுக்கும் இடையிலான உறவுகள் “மிகவும் பொதுவானதாகிவிட்டன” என்று கூறியுள்ளார். அந்த பெண் தோழி மீதும் இந்த வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் தோழியின் பல வற்புறுத்தலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவன், ஆசிரியரைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். தனது காரில் ஆள்நடமாட்டம் இல்லாத மாணவனை அழைத்து சென்ற மாணவனை வலுக்கட்டாயமாக ஆடைகளைக் கழற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த மாணவனை விலையுயர்ந்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று ஆசிரியை உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால் அந்த மாணவனுக்கு கடுமையான பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அந்த ஆசிரியை அவருக்கு சில பதட்ட எதிர்ப்பு மாத்திரைகளைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.. மேலும் அந்த ஆசிரியர் அடிக்கடி குடித்துவிட்டு மாணவனுடன் வலுக்கட்டாயமாக உறவில் இருந்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவன் பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டாதால், அந்த ஆசிரியை தங்கள் மகனை தொந்தரவு செய்ய மாட்டார் என்று நினைத்து குடும்பத்தினர் ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து அமைதியாக இருந்தனர். ஆனால் அந்த ஆசிரியை, வீட்டு ஊழியர்கள் மூலம் மீண்டும் மாணவனை தொடர்பு கொள்ள முயன்றார், தன்னை சந்திக்கச் சொன்னார். அப்போதுதான் குடும்பத்தினர் முறையான புகார் அளிக்க முடிவு செய்தனர்.
இந்த புகாரின் பேரில் அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணையில், ஆசிரியை தனது மாணவனை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததைக் கண்டறிந்தனர். பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் அதிகரித்து வருகிறது என்பதை இந்த அதிர்ச்சி சம்பவம் காட்டி உள்ளது.