புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ள பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஒரு சக்திவாய்ந்த ஆலயமாக திகழ்கிறது. புதுக்கோட்டை மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை வைத்து, அவை நிறைவேறியதும் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.
சிறப்புகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் :
இந்தக் கோவில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக, இங்குள்ள முனீஸ்வரர் தானாக முளைத்தவர் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. முன்பு இப்பகுதியில் பனை மரங்கள் தானாக முளைத்து மறைந்ததனால், இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும், மணி கட்டுதல், பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் திருமணம், குழந்தை வரம், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற வேண்டுதல்களை இந்த முனீஸ்வரர் நிறைவேற்றுவார் என பக்தர்களின் ஆழமாக நம்பிக்கையாக உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதத்தின் கடைசி ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்டமான திருவிழா நடைபெறுகிறது. இந்த கோவில், பக்தர்களின் வாழ்வில் நிம்மதியையும், நம்பிக்கையையும் அளிக்கும் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. முடிந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்..
Read More : நவராத்திரி.. கொலு அமைக்க சரியான நேரம் எது..? எப்படி வழிபாட்டை தொடங்கலாம்..?



