அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தின் பைன் பிளஃப் பகுதியில், 50 வயதான லூயிஸ் தாம்சன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது இளம் மகள் லியோனா சேகரித்து வைத்திருந்த முக்கிய ஆதாரங்கள், இரு இளைஞர்களைக் கைது செய்ய உதவியுள்ளன.
கணவரை இழந்த பிறகு வாடகை வருமானத்தில் தனியாக வாழ்ந்து வந்த லூயிஸ் தாம்சன், தனது தனிமையைப் போக்க, அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் டெலிவரி ஊழியர்களாக பணிபுரிந்த கெவியான் ஹாரிஸ் (22) மற்றும் விக்டர் பார்க் (24) ஆகிய இருவருடன் நட்பு கொண்டார்.
காலப்போக்கில், இந்தப் பழக்கம் கள்ள உறவாக மாறியது. லூயிஸ் அவர்களுக்குப் பணம் கொடுத்து தனது தனிமையைத் தணித்துள்ளார். ஆனால், இந்தக் கள்ள உறவு நாளடைவில் ஆபத்தானதாக மாறியது. கெவியான் மற்றும் விக்டர் இருவரும் லூயிஸைத் தாக்கியதுடன், அதிக பணம் கேட்டும், லூயிஸுக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சொத்தை தங்கள் பெயருக்கு மாற்றச் சொல்லியும் மிரட்டியுள்ளனர்.
இதை ஒப்படைக்க மறுத்தால், “அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்” என்று அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், தனது தாயின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று பயந்த மகள் லியோனா, இந்த ஆபத்தான உறவுகளைப் பற்றி யாரிடமும் வெளியிட முடியாமல் திணறியுள்ளார்.
இருப்பினும், அந்த இளைஞர்கள் பயன்படுத்தி வீட்டுக் குப்பைத் தொட்டியில் வீசிச் செல்லும் ஆணுறைகளைச் சேகரித்து, அதனை பிளாஸ்டிக் டப்பாவில் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி அன்று கல்லூரி முடிந்து திரும்பிய லியோனா, ரத்தக்கறை ஏதுமின்றி தனது தாய் படுக்கையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீஸைத் தொடர்பு கொண்டார்.
முதலில் லியோனா மீது சந்தேகம் கொண்ட போலீசார், உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியான பின் அதிர்ச்சியடைந்தனர். பிரேதப் பரிசோதனையில், லூயிஸ் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், இறப்புக்கு முன் அவர் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்தன.
லியோனாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது தாய் வைத்திருந்த கள்ள உறவுகள் குறித்த விவரங்கள் தெரியவர, அவர் சேமித்து வைத்திருந்த 15-க்கும் மேற்பட்ட ஆணுறைகள் டி.என்.ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், கெவியான் ஹாரிஸ் மற்றும் விக்டர் பார்க் ஆகியோரின் டிஎன்ஏ தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையின்போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.