தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில், மலைமேல் எழுச்சியுடன் திகழும் முருகன் கோயில்கள், பக்தர்களின் நம்பிக்கையை ஊட்டும் தலமாக விளங்குகிறது. அதுபோல, நாமக்கல் மாவட்டம் கூலிப்பட்டியில், சுமார் மூன்று நூற்றாண்டுகளாக பக்தர்களை தன்னை நோக்கி இழுத்து வரும் ஒரு மலைத் திருத்தலம் கந்தகிரி பழனி ஆண்டவர் கோயில்.
இந்த மலைக்கோயிலில் ‘அண்டி கோலத்தில்’ திகழும் முருகனை காணும் போது, திருவண்ணாமலை பழனி மலையை நேரில் சென்று தரிசித்த உணர்வு எழுகிறது. நுழைவாயிலை கடந்து ஏறத் தொடங்கியதும் ஞானப் பழத்தால் ஏற்பட்ட பிரச்னையில் கோபித்துக் கொண்டு கயிலை மலையை விட்டுச் சென்ற முருகனை சமாதானப்படுத்தும் வகையிலும், முருகன் தந்தைக்கு உபதேசம் செய்யும் நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கோயிலின் மூலவரான பழனி ஆண்டவரை வழிபட்டால் விரைவில் திருமண யோகம் அமைவதாகவும், சஷ்டி விரதத்துடன் பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் எனவும் பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். மலையின் மேல் ஏறும்போது தெற்குப் பகுதியில் சிவபெருமான் கழுத்தில் பாம்புடன் தோன்றும் திருவுருவம் தரிசிக்கக்கூடியது.
மலையின் உச்சியில் இடும்பன் சன்னதி, விநாயகர் சன்னதி ஆகியன அமைந்துள்ளன. குறிப்பாக, இடும்பனை வணங்கினால், மனதுக்குள் ஆழ்ந்து கிடக்கும். கோபம்
சூழ்ச்சி, வஞ்சகம், ஆத்திரம் போன்ற கெட்ட குணங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
Read more: டிகிரி போதும்.. மாதம் ரூ.1,12,400 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..