சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில் முத்துவால் அருண், சீதா இருவருக்கும் இடையில் பிரச்சனை வெடிக்கிறது. உடனே சீதா கோபத்துடன் பெட்டியை தூக்கி அம்மா வீட்டுக்கு வந்து விடுகிறாள். மகளை பார்த்ததும் சந்திரா, “என்னடீ, ஆச்சு என்ன?” என விசாரிக்கிறாள். சீதா நடந்ததை சொல்லி, “இப்படியெல்லாம் சண்டை போட்டு வருவது சரியல்ல. எதுவும் இருந்தால் அங்கேயே இருந்து பார்த்திருக்கணும்” என அறிவுரை கூறுகிறாள். ஆனால் சீதா, “நான் திரும்ப அருணே வந்து கூப்பிடும் வரை இங்கதான் இருப்பேன். எங்கயும் போக மாட்டேன்” என கூறுகிறாள்.
இதன்பின், சீதாவின் அம்மா மீனாவிடம் நடந்ததை கூறுகிறாள். உடனே முத்துவும் மீனாவும் அம்மா வீட்டிற்கு வந்து சீதாவிடம் அறிவுறுரை கூறுகிறார்கள். வீட்டில் அருண் இருப்பதை அறியாமல் முத்து, அருணை அர மெண்டல், ஈகோ அதிகம் எனக் கூறி திட்டுகிறான். இதை கேட்ட அருண் ரூமில் இருந்து வெளியே வந்து சீதா என குரல் கொடுக்கிறான். இதை பார்த்த முத்து அவன் உள்ளதான் இருக்கானு சொல்ல மாட்டியா என மைண்ட் வாய்சில் கூறுகிறான்.
மறுபுறம் ரவி ரூமுக்கு வர, ஸ்ருதி அவனை நிறுத்தி கடுமையாக வாக்குவாதம் செய்கிறாள். “நான் எவ்வளவு பதட்டத்துல இருந்தேன் தெரியுமா? நீயோ உன் முதலாளிம்மாவுடன் கிளம்பி போயிட்ட. பங்ஷனுக்கு வந்தவர்கள் கூட கொஞ்ச நேரம் இருந்தாங்க. ஆனால் நீ உடனே கிளம்பிட்ட” என்று கோபத்துடன் கேட்கிறாள்.
அதற்கு ரவி, “என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத. நீ பங்ஷன்ல மட்டும் கவனமா இருந்த. அப்போ இங்க பல விஷயம் நடந்தது” என விளக்க முயற்சிக்கிறான். ஆனால் ஸ்ருதி அதனை கேட்க மறுத்து, கடுமையாக வாக்குவாதம் செய்கிறாள். இறுதியில், “நீ இங்கிருந்து போ” என்று விரட்டிவிடுகிறாள். இதனால் ரவி, “இதுக்கு மேல உன்கிட்ட மனுஷன் பேச முடியாது” என கூறி வெளியில் போய்விடுகிறான்.
அதற்குப் பிறகு மறுநாள் பார்வதி வீட்டிற்கு விஜயா வரும்போது, அங்கு சிவன் முன்பே வந்து பேசி கொண்டிருக்கிறான். அவனை பார்த்ததும் விஜயா அதிர்ச்சியடைந்து, “நீங்க செய்றது எதுவும் சரியா தெரியலை சிவன். இன்னும் இப்படிதான் போகணும்னா, யோகா கிளாஸுக்கே வரக்கூடாது என சொல்ல வேண்டிய நிலை வரும்” என எச்சரிக்கிறாள். இதைக் கேட்டு சிவன் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விடுகிறான்.
பின்னர் அங்கு ஸ்ருதியின் அம்மா, அப்பா இருவரும் வருகிறார்கள். அவர்கள், “ஸ்ருதி ஹோட்டல் ஆரம்பிச்சதே ரவிக்காக தான். ஆனால் மாப்பிள்ளை அதை புரிஞ்சுக்காம இருக்கார். அவரை முதலில் ஹோட்டலுக்கு வர சொல்லுங்க. எங்க சொத்து எல்லாமே ரவி, ஸ்ருதிக்கு தானே” என்கிறார்கள். இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியடைந்து வாயை மூடிக்கொள்கிறாள். இந்த சம்பவத்திற்குப் பிறகு விஜயா எதைச் செய்யப் போகிறார் என்பது நாளைய சிறகடிக்க ஆசை எபிசோட்டில் வெளியாக இருக்கிறது.
Read more: 10 பேர் பலி.. TLP போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு.. பெரும் பரபரப்பு..