விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், வீட்டுக்கு வந்த ரோகிணியிடம் எங்கு போயிட்டு வர்ற என விஜயா கேட்க, மீனாவை சந்தித்ததை மறைக்கிறாள். கோபமடைந்த விஜயா, திரும்பவும் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா, நீ மீனாவை பார்த்துவிட்டு வந்ததை நான் பார்த்தேன் என கூறுகிறாள். உடனே ரோகிணி, நான் சாப்பிட அந்த ஓட்டலுக்கு சென்றேன். அப்போது மீனா அங்கு பூ கொடுக்க வந்ததாங்க. அப்போது எதார்த்தமாக சந்தித்தோம் என பொய் சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறாள்.
சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் முத்து, ரோட்டோரம் உள்ள கடையில் இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்க, அப்போது அந்த வழியாக வந்த அருண், அவரிடம் வம்பிழுப்பதற்கா இளநீர் கடைக்கு வருகிறார். செய்யுற தப்பெல்லாம் பண்ணிட்டு, நல்லவன் மாதிரி மாலை போட்டுக்குறாங்க. பொண்டாட்டிய சந்தோஷமா வச்சிக்க துப்பில்ல இவங்கெல்லாம் எதுக்கு மாலை போடுறாங்களோ என ஜாடை மாடையாக பேசி வம்பிழுக்கிறார்.
கோபமடையும் முத்து அவரை அடிக்கப் பாய, செல்வம் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான். இதையடுத்து வீட்டுக்கு சென்ற முத்துவை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள். முத்து மாலை போட்டுள்ளதால் இனி வீட்டில் யாருமே அசைவம் சாப்பிடக் கூடாது என அண்ணாமலை சொல்ல அதற்கு மனோஜ் மற்றும் விஜயா இருவரும் தங்களால் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. அவனை வேண்டுமானால் வீட்டை விட்டு போக சொல்லுங்கள் என்கிறார்கள்.
இதையடுத்து கொஞ்ச நாள் நான் கார் ஷெட்டில் தங்கிக் கொள்வதாக முத்து சொல்கிறார். முத்து தன்னுடைய கார் ஷெட்டில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பூஜையில் மீனாவும் அவரின் குடும்பத்தினரோடு வந்து கலந்துகொள்கிறார். அப்போது அவருக்கு இளநீர் கொடுத்து சமாதானம் செய்கிறான் முத்து. இதன் பின்னர் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? ரோகிணி பற்றிய உண்மை வெளிவருமா என்பதை பொருத்திருந்தே பார்க்கலாம்.
Read more: ட்ரம்பின் புதிய கிரீன் கார்டு நடவடிக்கையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா..? விவரம் இதோ..



