விஜய் டிவியில் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘சிறகடிக்க ஆசை’ தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. தற்போது வெளியான புரோமோவில், பைக்கில் வந்த ஒருவர் தெருவில் நடந்து சென்ற பெண்ணை இடித்துவிட்டு தப்பிச் செல்கிறார். இதைக் கண்ட அருண் வேகமாக அந்த நபரைத் துரத்திச் செல்ல, அங்கு இருந்த முத்து, படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறார்.
இதனால் முத்துவுக்கு நல்ல பெயர் கிடைக்க, போலீஸ் மீது மக்கள் குறை சொல்கின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் டியூட்டியில் இருந்த அருணுக்கு சஸ்பென்ஷன் கிடைக்கிறது. சஸ்பென்ஷனால் கோபமடைந்த அருண், “இதற்கெல்லாம் முத்துதான் காரணம்” என சீதாவிடம் குறை கூறுகிறார். சீதாவின் மாமியாரும் உன் மாமா செய்றது சரி இல்லை. அவரால் தான் என் மகனின் வேலை போச்சு என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்.
இதை கேட்ட சீதான் கோபம் அடைந்து மீனாவை அம்மா வீட்டுக்கு வர சொல்கிறாள். இதற்கெல்லாம் மாமா தான் காரணம். அவர் என் புருஷனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சண்டையிடுகிறாள். இதை கேட்ட மீனா இப்போதைக்கு இத பற்றி பேச வேண்டும். விடு சீதா என்கிறாள். கேட்காத சீதா, உன் புருஷனால் தான் என் புருஷன் சஸ்பென்ட் ஆகிருக்காரு. அவர் எல்லாமே திட்டமிட்டு தான் செய்றாரு. அவர் அருண்கிட்ட மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறாள்.
உடனே மீனா அவரே இதுக்கு சரினு சொன்னாலும், நா அவர மன்னிப்பு கேட்க விடமாட்டேன் என்கிறாள். அக்கா தங்கைக்கு இடையே மீண்டும் சண்டை வெடித்தூள்ளது.அடுத்தடுத்த எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
Read more: தினமும் ரூ.340 சேமித்தால் 17 லட்சம் ரிட்டன்.. தபால் அலுவலகத்தின் சூப்பரான சேமிப்பு திட்டம்..!!



