விஜய் டிவியில் டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கிறது. முந்தைய எபிசோட்டில் அருண் சொன்ன பொய்யை நம்பி சீதா மீனாவிடம் சண்டை போடுகிறாள்.
என் புருஷன் படித்தவர்.. உன் புருஷன் படிக்காத ரவுடி, குடிகாரன் என சீதா கூறியதும், ஆத்திரமடைந்த மீனா சீதாவை கண்ணத்தில் பளார் விட்டார். சீதா பேசியதால் வருத்தப்பட்ட மீனா வீட்டிற்கு சென்று சமைக்காமல் படுத்துவிட்டார். இதற்கிடையில், விஜயா சமையலறைக்கு சென்றபோது உணவு தயாராக இல்லை என்று கவலைப்பட்டார். தூங்கிக் கொண்டிருந்த மீனாவைப் பார்த்ததும் கடும் கோபம் அடைந்து, அவர்மேல் தண்ணீர் ஊற்றுகிறார்.
இதைக் கண்ட முத்து, விஜயாவை அடிக்கக் கூடும் நிலைமைக்கு வருகிறார். ஆனால், “அம்மாவாகி விட்டவர்” என்ற கோபத்தில் சண்டை மட்டும் போட்டார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் வந்த நிலையில், விஜயாவை கடுமையாக திட்டினர். வழக்கம் போல் மனோஜும் ரோகினியும் மட்டும் விஜயாவுக்கு சப்போர்ட் செய்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான புரோமோ ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருண் பேச்சை கேட்ட சீதா முத்துவை தவறாக நினைக்கிறார். இதனை அறிந்த முத்து பணியில் இருந்த அருணிடம் சென்று உனக்கு என் மேல் கோபம் இருந்தால் அதை என்னிடம் காட்டு.. அதை விட்டுவிட்டு குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணாத எனக் கூறுகிறார். இதனை கேட்ட அருண் சீதா உன் மேல ரொம்ப மரியாத வச்சுருக்கா.. அது எனக்கு பிடிக்கல.. அந்த மரியாதைய கெடுக்க தான் நான் இப்படி செஞ்சேன்.
நான் சொன்ன மாதிரியே இப்போ சீதாக்கு உன் மேல இருந்த மரியாத போச்சு என அருண் கூறினார். அதனை கேட்ட முத்து சிரித்ததும் அருணுக்கு ஒன்றும் புரியல.. இப்போ நெஜமாவே உன்ன அடிக்க ஆளோட தான் டா வந்திருக்கேன் எனக் சொல்லிவிட்டு, செல்போனில் இப்போ நீங்க வாங்க என அழைக்கிறார்.
அங்கே தான் ட்விஸ்ட் இருக்கு.. அருண் தன் வாயால் உண்மையை கூறியதை சீதாவும் மீனாவும் காரில் இருந்து கேட்டு கொண்டிருந்தார்கள்.. உண்மையை அறிந்த சீதா, மாமாவை தவறாக நினைத்து விட்டோம் என்ற வருத்ததுடனும், அருண் மேல் வைத்திருந்த நம்பிக்கை போச்சு என்ற ஆத்திரத்துடன் அருணை நோக்கி வந்தார். இதனை பார்த்த அருண் மிரண்டு போய்விட்டார். சீதா அடுத்து எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.