விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், சபரிமலைக்கு மாலை போட்டு, முத்து மீனாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் தன்னுடைய மாமியாரிடம், தான் மாலை போட்டுள்ளதால், தனது கார் ஸ்டாண்டில் பூஜை போட இருப்பதாகவும், அதில் தவறாமல் வந்து கலந்துகொள்ளுமாறும் அவரை அழைக்கிறார். அப்போது மீனாவையும் அழைத்து வருமாறு சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் மீனாவை பார்க்க வீட்டுக்கு வரும் அண்ணாமலை, மீனாவிடம் நீ முத்து குடிக்கிறான் என்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வரவில்லை. அதன் பின்னால் வேறு காரணமும் இருக்கு என்கிறான். அதற்கு மீனா அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். முத்து இனி குடிக்க மாட்டான். உனக்காக தான் மாலை போட்டு வந்திருக்கான். நீ மீண்டும் வீட்டு வந்துவிடு என சொல்லிவிட்டு அண்ணாமலை கிளம்புகிறார்.
உண்மையை சொல்ல முடியாமல் மீனா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள். அந்த நேரத்தில் ரோகிணி மீனாவுக்கு போன் செய்து நேரில் பேச வேண்டும் என அழைக்கிறாள். அங்கு சென்ற மீனாவிடம் நீங்க இந்த விஷயத்தை உங்க அம்மாகிட்ட சொல்லிட்டீங்களானு கேட்க தான் வரச்சொன்னேன் என ரோகிணி கூறுகிறாள். டென்ஷன் ஆன மீனா, இப்படி பயந்து பயந்து வாழுறதெல்லாம் ஒரு வாழ்க்கையா என திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.
ரோகிணியும் மீனாவும் ஓட்டலில் இருந்து வெளியே வந்த நிலையில், அந்த வழியாக ஆட்டோவில் சென்ற விஜயா அதை பார்த்துவிடுகிறாள். இவளுங்க ரெண்டு பேரும் வீட்டிலே சரியா பேசிக்க மாட்டாளுக.. வெளில வந்து பேசுற அளவுக்கு என்ன விஷயமா இருக்கும். நமக்கு எதிரா சதித்திட்டம் தீட்டுறாளுங்களா என்கிற குழப்பத்துடனே செல்கிறாள்.. இதையடுத்து வீட்டுக்கு வரும் ரோகிணியிடம் எங்கு போயிட்டு வர்ற என கேட்க, ரோகிணி, மீனாவை பார்த்துவிட்டு வந்ததை மறைக்கிறார். இதனால் டென்ஷன் ஆன ரோகிணி, ஏன்டி பொய் சொல்ற என கேட்க ரோகிணி ஷாக் ஆகிறாள்.
Read more: “2026-ல் மாபெரும் மக்கள் புரட்சி உருவாகி, விஜய் வெற்றி பெறுவார்..” அடித்து சொன்ன செங்கோட்டையன்..!



