ஆப்பிள் அல்ட்ரா வாட்சின் உண்மையான விலை சுமார் 90 ஆயிரம் ரூபாயாகும். ஆனால் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்கள் வெறும் 3000 ரூபாய்க்கு வாங்கும் இந்த ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் உண்மையிலேயே ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வின் நகல் என்று சொல்லப்படுகிறது.
அசல் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்ற அம்சங்களை இதில் நாம் அனுபவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான ஆப்பிள் அல்ட்ரா மாடலில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதில் செயல்படாது என்று கூறப்படுகிறது. பெயருக்காக வேண்டுமானால் இதனை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மிகவும் விலை உயர்ந்தது. ஆகவே அதனை 90 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்குவது என்பது முடியாத காரியம். அவர்கள் இது போன்ற பிரதி மாடலை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் சிலருக்கு இந்த வாட்ச்சை ஆப்பிள் அல்ட்ரா என்று விற்பனை செய்து வருவதால் இதில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் இந்த தகவல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்