டெல்லி மாநிலம் உத்தம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரை 21 வயதான ரஹ்மான் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தாயிடம் கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறுகையில், “நாங்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டோம். எங்கள் மகள் வீட்டில் தனியாக இருந்தார். சனிக்கிழமை அன்று, பக்கத்துவீட்டுக்காரர் எங்களுக்கு தொலைபேசிய்ல் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் அழுது கொண்டே இருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நாங்கள் உடனே வீட்டிற்கு சென்றோம். அப்போது, என் மகளிடம் பேசும்போது, பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டிற்குள் புகுந்து என் மகளை பலாத்காரம் செய்துள்ளார்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் குர்மீத் சிங் கூறுகையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ரஹ்மான் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாட்டில் முதல்முறையாக கணக்கெடுப்பு பணி..!!



