பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாட்களாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற நிலையில், அவரது மருத்துவ நிலை நேற்று மோசமானது.. இதனால் தற்போது அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளார். 89 வயதாகும் தர்மேந்திரா மிக நெருங்கிய மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் இன்று காலை தர்மேந்திரா காலமானதாக தகவல் வெளியானது.. ஆங்கில ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இது தொடர்பான செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது அந்த தகவலை அவரின் மகள் மறுத்துள்ளார்..
தர்மேந்திராவின் உடல்நிலை குறித்த தகவலை ஈஷா தியோல் பகிர்ந்துள்ளார். தனது தந்தையின் உடல்நிலை குறித்த ஊகங்களுக்குள் விரைந்து செல்ல வேண்டாம் என்று ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஊடகங்கள் அதிக வேகத்தில் சென்று தவறான செய்திகளைப் பரப்புவதாகத் தெரிகிறது. என் தந்தை நலமுடன் இருக்கிறார், குணமடைந்து வருகிறார். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தனியுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி..” என்று பதிவிட்டுள்ளார்..
Read More : BREAKING | பெரும் சோகம்..!! பிரபல நடிகர் தர்மேந்திரா காலமானார்..!! திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்..!!



