மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் நடந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த அஞ்சலி வர்மா (32) என்பவர், தனது தனிமையை போக்க இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதால், அந்தப் பழக்கம் விபரீதத்தில் முடிந்துள்ளது.
மும்பையின் வாஸ்ட்டி நகரில் வசித்து வந்த அஞ்சலி வர்மா, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் ஏற்பட்ட தனிமையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த வெறுமையைப் போக்க அவர் இன்ஸ்டாகிராமில் அதிக ஈடுபாடு காட்டினார். அதில், வெறும் 10 நாட்களுக்கு முன்பு அறிமுகமான கரன் மல்ஹோத்ரா (28) என்ற ஐ.டி. ஊழியருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாட்டிங்கில், அஞ்சலி தனது திருமண வாழ்க்கை மற்றும் தாம்பத்தியக் குறைகள் குறித்து ஆசைகளைத் தாண்டி மனம் திறந்து பேசியுள்ளார். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, அஞ்சலியும் கரனும் ஒரு லாட்ஜில் கணவன் – மனைவி எனக் கூறி அறை எடுத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அறைக்குள் இருந்து யாரும் வெளியே வராத நிலையில், லாட்ஜ் மேலாளர் சஞ்ஜய் குமார், கரன் வெளியே வந்துபோகும்போது அவரது சட்டையில் படிந்திருந்த ரத்தக்கறையை கண்டு சந்தேகம் அடைந்தார்.
பின்னர், சந்தேகத்தின் பேரில், மேலாளர் அறைக்குள் நுழைய முயன்றபோது, கரன் அவர்களை தள்ளிவிட்டு, தப்பிச் சென்றார். இதையடுத்து, அறையைத் திறந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அஞ்சலி மயங்கிய நிலையில், அவரது பிறப்புறுப்பில் கடித்தது போன்ற காயத்துடன் அதிக அளவில் ரத்தம் கசிந்தபடி கிடந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள், கரன் மல்ஹோத்ராவை அருகிலுள்ள ஒரு கஃபேயில் மும்பை போலீசார் கைது செய்தனர். “அவள் விருப்பத்தின் பேரிலேயே நான் செயல்பட்டேன். ஆனால், அது தவறுதலாகிவிட்டது” என்று கரன் முதல் விசாரணையில் கூறியுள்ளார். அஞ்சலி தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



