கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவின் கம்சாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியா. இவர், தையல்காரராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி (வயது 53). இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், சுப்பிரமணியா வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், அவரது சடலம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், மீனாட்சிக்கும், சுப்பிரமணியாவின் உறவினரான பிரதீப் (33) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. புதிதாக கட்டிய வீட்டில், ஆசாரி வேலைக்கு பிரதீப் வந்தபோது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதை சுப்பிரமணியா அறிந்து, மனைவியையும் பிரதீப்பையும் எச்சரித்ததாகவும், அந்தத் தொடர்பை நிறுத்தும்படி கண்டித்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அதையும் மீறி, மீனாட்சியும் பிரதீப்பும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும், சுப்பிரமணியாவைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பிரதீப் தனது நண்பர்கள் சித்தேஷ் மற்றும் விகாஷ் ஆகியோர் உதவியுடன் சுப்பிரமணியாவை கொலை செய்து, பின்னர் அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர். இந்த கொலைக்கு சுப்பிரமணியாவின் மனைவி மீனாட்சி, முக்கிய உடந்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மீனாட்சி, பிரதீப், சித்தேஷ் மற்றும் விகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இறுக்கமான பிரா அணிந்தால் புற்றுநோய் வருமா..? இப்படியே தொடர்ந்தால் எந்த மாதிரியான ஆபத்து வரும்..?