பிஹார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இச்சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மறைந்த என் தாயாரை அவமதிப்பு செய்கிறார்கள் என ஆர்ஜேடி-காங்கிரஸை பிரதமர் மோடி சாடினார்.
பீகார் மாநிலத்தில் கிராமப்புற பெண்கள் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் “பீகார் ராஜ்ய ஜீவிகா நிதி சாக் சஹாரி சங்க லிமிடெட்” என்ற புதிய நிதி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மெய்நிகர் முறையில் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், பீகார் பெண்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சியை பாராட்டினார். மேலும், பெண்களுக்கு அதிகாரமளிக்காமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை. தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது” என்றார்.
அதே சமயம், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். “காங்கிரஸ் மேடையில் என் தாயார் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக வேண்டிய நிலை வந்திருக்கும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. என் தாயாருக்கும் அரசியலுக்கும் என்ன சம்மந்தம். மறைந்த என் தாயாரை வைத்து அரசியல் செய்கிறார்கள்” என ஆர்ஜேடி-காங்கிரஸ் மீது தாக்குதல் மேற்கொண்டார்.
Read more: மொபைல் பயனர்களே உஷார்! இந்த eSIM மோசடியில் சிக்காதீங்க! உங்கள் பணம் காலி..!



