தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ தேவி… குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி அவர், பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து ஏராளமான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.. தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்டின் வெற்றிகரமாக நடிகையாக ஸ்ரீதேவி வலம் வந்தார்..
நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 54 வயதில் அவரது திடீர் மறைவு முழு திரைப்படத் துறையினருக்கும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. ஆனால் மிகப்பெரிய தாக்கம் அவரது மகள்களான ஜான்வி மற்றும் குஷி கபூர் மீது இருந்தது. தாயின் பாதுகாப்பை இழந்ததோடு, இரு மகள்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், பொது வாழ்க்கையிலும் தொடர்ந்து கேமரா கவனத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சமீபத்தில், தனது தாயின் மரணத்திற்குப் பிறகு தான் எதிர்கொண்ட விஷயங்கள் நடிகை ஜான்வி குறித்துப் பேசினார். அப்போது ” என் அம்மாவின் மரணம் பொழுதுபோக்காக மாறியது.. ஊடகங்கள் என்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தன. நான் என் படத்தை விளம்பரப்படுத்த சிரித்தால், என் அம்மா இறந்த பிறகும் நான் நன்றாக இருக்கிறேன் என்று கூறப்பட்டது. நான் அமைதியாக இருந்தால், நான் கூலான ந்பார், இதயமற்றவள் என்று அழைக்கப்பட்டேன். கற்பனை செய்து பாருங்கள், என் அம்மாவை இழந்த பிறகும், இதெல்லாம் மக்களுக்கு பொழுதுபோக்காக மாறியது.”
ஜான்வி, குழந்தை பருவத்தில் ஊடகங்களை எதிர்கொள்வது தனக்கு ஒரு பொதுவான விஷயம் என்றும், ஆனால் தனது தாயின் மரணத்திற்குப் பிறகு, அது தன்னை உள்ளிருந்து உடைத்துவிட்டது என்றும் கூறினார். “நாங்கள் அனுபவித்த இழப்பை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. என் அம்மாவை இழப்பது ஒரு வலி, ஆனால் அதன் பிறகு நான் எதிர்கொள்ள வேண்டியதெல்லாம் மனிதநேயம் பற்றி எனக்கு மிகவும் எதிர்மறையாக இருந்தது. குஷியும் நானும் எங்கள் பலவீனங்களைக் காட்ட ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அதனால் தான் மக்கள் எங்கள் மீது சேற்றை வீசத் தொடங்கினர், நாங்கள் மனிதர்களே இல்லை என்பது போல் பேச தொடங்கினர்..” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்..
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கடந்த 2018-ம் ஆண்டு தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.. அந்தப் படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயின் மரணம் ஜான்விக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், இரு சகோதரிகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, இப்போது தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..