90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தன்னுடைய மகனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்திருந்தார், ஆனால் 10 வயதுக்கு மேலே தனுஷால் எழுந்து நடக்க முடியாமல் போயிருக்கிறது.
ஆனாலும் தனுஷ் தன்னுடைய விடாமுயற்சியால் வீச்சேரியில் இருந்தபடியே ஆன்லைன் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தமாக பல படிப்புகளையும் படித்திருக்கிறார். 24 ஆவது வயதில் கடந்த வருடத்தில்தான் தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் இந்த திருமண செய்தி பெரிதாக விவாதிக்கப்பட்டது. தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுக்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் மணப்பெண் அக்ஷயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாங்கள் விருப்பப்பட்டது தான் திருமணத்தை செய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.
திருமணத்திற்கு பிறகு தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் நெப்போலியன் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருந்தார். சமீப காலங்களில் பதிவிடும் வீடியோக்களில் அக்ஷயா இல்லாதது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மருமகள் அக்ஷயாவை காரில் அழைத்து வந்த நெப்போலியன், “என் வீட்டில் குலசாமி மீண்டும் வந்துவிட்டது!” என்று பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், நெப்போலியனின் உறவினர்கள் அக்ஷயாவிற்குப் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் அக்ஷயா, நெப்போலியன் மற்றும் அவரது மனைவியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். பின்னர் தனது கணவர் தனுஷைக் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
Read more: கண்டு கொள்ளாத மோடி.. தவெக கூட்டணியில் இணையும் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் அணி..?