நடுக்கடலில் மர்ம கோட்டை!. 13 முறை தோற்ற சத்ரபதி சிவாஜி!. இன்றுவரை யாராலும் கைப்பற்ற முடியவில்லை!. பின்னணி என்ன?

Murud Janjira Fort 11zon

இந்தியாவில் பல வரலாற்று கோட்டைகள் உள்ளன, அவற்றில் ஆழமான மர்மங்கள் சூழ்ந்துள்ளன. இங்கு ஆட்சி செய்த மன்னர்கள் தங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்க கோட்டைகளைக் கட்டினார்கள். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோட்டைகளும், தனித்துவமான அம்சங்களையும் வரலாற்றுக் கதைகளையும் பெருமைப்படுத்துகின்றன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருத் என்ற கடற்கரை கிராமத்தில் இதேபோன்ற ஒரு கோட்டை அமைந்துள்ளது, இது முருத் ஜஞ்சிரா கோட்டை என்று அழைக்கப்படுகிறது . கடல் மட்டத்திலிருந்து 90 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் சிறப்பு என்னவென்றால், இது கடலின் நடுவில் (அரேபிய கடல்) கட்டப்பட்டுள்ளது.


முருட் ஜஞ்சிரா கோட்டை ஏன் சிறப்பு வாய்ந்தது? பிரம்மாண்ட கட்டமைப்புக்காக அறியப்படும் இந்த ஜஞ்சிரா கோட்டையானது மாலிக் அக்பர் என்பவரால் கட்டப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் ஒருபோதும் எந்த மன்னராலும் வெல்ல முடியாத ஒரே கோட்டையாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது. பிரிட்டிஷ், போர்த்துகீசியம், முகலாயர்கள், சிவாஜி மகாராஜ், கன்ஹோஜி ஆங்ரே, சிமாஜி அப்பா மற்றும் சாம்பாஜி மகாராஜ் ஆகியோர் இந்தக் கோட்டையைக் கைப்பற்ற கடுமையாக முயன்றனர், ஆனால் அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை என்று கூறப்படுகிறது. 350 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை ‘வெல்ல முடியாத கோட்டை’ என்று அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.

முருத்-ஜஞ்சிரா கோட்டையின் கதவு சுவர்களுக்குப் பின்னால் கட்டப்பட்டுள்ளது, கோட்டையிலிருந்து சில மீட்டர்கள் தூரம் சென்றால் சுவர்கள் தெரிவதில்லை. கோட்டையை நெருங்கி வந்த பிறகும் எதிரிகள் ஏமாற்றப்பட்டு கோட்டைக்குள் நுழைய முடியாமல் போனதற்கு இதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் மாமன்னனாக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி கூட 13 முறை இக்கோட்டையை வெல்ல முயற்சித்தார். ஆனால், 13 முறையும் தோற்றே போனார். அவருக்கு பின்னர் அவரது மகன் சம்பாஜியும் ஜஞ்சிரா கோட்டையை கைப்பற்ற முயற்சித்து அவரும் தோற்று போனார்! அதாவது, மன்னர் சிவாஜிக்கு பின்னர் அவரது மகனும் இக்கோட்டை மீது படையெடுத்தார் அல்லவா? அவரும் தோற்றுதான் போனார்?.

இது 22 ஆண்டுகளில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டையில் 22 பாதுகாப்புச் சாவடிகள் உள்ளன. சித்திக் ஆட்சியாளர்களின் பல பீரங்கிகள் இன்னும் இங்கு வைக்கப்பட்டுள்ளன, அவை இன்னும் ஒவ்வொரு பாதுகாப்புச் சாவடியிலும் உள்ளன.

இந்தக் கோட்டை 40 அடி உயர மதில்களால் சூழப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை பஞ்ச பீர் பஞ்சதன் ஷா பாபாவின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஷா பாபாவின் கல்லறையும் இந்தக் கோட்டையில் உள்ளது. கடற்கரை கோட்டையான இங்கு செல்ல நாம் படகை தான் பயன்படுத்த முடியும். இங்கு சிதைந்த மசூதி, அரண்மனை, ஒரு பெரிய நீச்சல் குளம் இருக்கிறது. இந்த குளத்திற்கு அருகிலிருக்கும் நீரோடைகளில் இருந்து தண்ணீர் நிரப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு கிணரும் இருக்கிறது. இதன் தண்ணீர் மிக இனிமையான சுவைக் கொண்டதாக இருக்கும். கடலின் உப்பு நீரின் நடுவில் இருந்தாலும், இனிமையான நீர் இங்கே வருகிறது. இந்த இனிமையான நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.

Readmore: விராட் கோலி-ரோகித் சர்மா கிரிக்கெட் விளையாட தடையா?. வெளியான அதிர்ச்சி தகவல்!

KOKILA

Next Post

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் AI… WhatsApp-ல் வந்த அசத்தல் அப்டேட்..!!

Wed Jul 2 , 2025
AI summarizes unread messages... Amazing update in WhatsApp..!!
whatsapp update

You May Like