உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் சேர்ந்து, தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றுப் பகுதியில் துணி துவைக்கச் சென்றுள்ளார். பின்னர், துவைத்த துணிகளை எடுத்துக்கொண்டு சகோதரி வீட்டிற்குச் சென்ற நிலையில், சிறுமி மட்டும் மீதமிருந்த துணிகளை துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து ஆள் நடமாட்டம் இல்லாத, அப்பகுதியில் இருந்த ஒரு மத வழிபாட்டுத் தலத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே மீண்டும் கிணற்றுப் பகுதிக்குத் திரும்பி வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சகோதரியிடம் நடந்த கொடூரத்தை பற்றிச் சிறுமி கூறியதைக் கேட்டு, அவர் அதிர்ச்சி அடைந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 2 நபர்களையும் பிடிக்க போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
Read More : அரிசி சாதத்தை தவிர்ப்பவரா நீங்கள்..? கார்போஹைட்ரேட் குறித்த தவறான நம்பிக்கைக்கு நிபுணர் விளக்கம்..!!



