வசமா சிக்கிய நந்தினி.. பிளானை மாற்றும் அறிவுக்கரசி.. சக்திக்கு சவால் விட்ட குணசேகரன்..!! எதிர்நீச்சல் தொடர்கிறது..

edhirneechal serial

எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோடில், ஜனனியிடம் இருந்து போன் வராததால், சக்தியும் நந்தினியும், தர்ஷனை மண்டபத்தில் இருந்து அழைத்துக்கொண்டு போக முயற்சி செய்கிறார்கள். மறுபக்கம் அறிவுக்கரசி, வீடியோ மேனை கொலை செய்துவிட்டு, அவனின் உடலை யாருக்கும் தெரியாமல் இந்த இடத்தில் வெளியில் கொண்டு போக வேண்டும் என ரௌடியிடம் சொல்கிறாள். மேலும், கொலை நடந்த இடத்தில் எப்படி கல்யாணம் செய்வது என்று யோசிக்கும் அறிவுக்கரசி, குணசேகரிடம் வந்து, மாமா என் மனதிற்கு ஏதோ தவறாக படுகிறது.


மண்டபத்தில் திருமணம் வேண்டாம் கோவிலில் திருமணத்தை வைத்துக்கொள்ளலாம், என்று சொல்கிறாள். நாம் ஏன் பயந்து கோவிலில் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று கேட்கிறார். உடனே அறிவுக்கரசி, கல்யாணத்தில் இனிமேல் எந்த பிரச்சனையும் நடக்காது, அதான் ஜீவானந்தமும் பார்கவியும் செத்துட்டாங்களே மாமா என சொல்கிறாள்.

அதற்கு குணசேகரன், அவர்கள் இருவரும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்கிறார். மேலும், நான் பிரம்மா முகூர்த்தத்தில் காலை 4:00 மணிக்கு கல்யாணம் இல்லை. நான் குறித்த நேரத்தில் 9 மணிக்கு தான் கல்யாணம். காலை நான்கு மணி பிரம்ம முகூர்த்தத்தில், அவர்கள் மூன்று பேரில் கதையை முடித்துவிட்டு, அதன் பிறகு நிம்மதியோடு கல்யாணத்தை நடத்துவேன் என்றார்.

மற்றொரு தர்ஷனை கடத்தி மண்டபத்தை விட்டு வெளியே செல்வதற்குள் குணசேகரன் கண்ணில் சிக்கி விடுகிறார்கள். மாறு வேஷத்தில் இருந்தது நந்ததி தான் என தெரிந்து ஆத்திரப்படுகிறார். உடனே நந்தினி தர்ஷனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. எங்களுக்கு வேறு வழி தெரியாமல் வேஷம் போட்டு தர்ஷனை கடத்தி செல்ல முயன்றோம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கதிர் நந்தினியை அடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து சக்தி நான் இந்த திருமணத்தை நான் நடத்த விட மாட்டேன் என சொல்கிறான். இதை சொல்வதற்கு நீ யாருடா… ஆம்பளையாக இருந்தால் இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி காட்டு என குணசேகரன் சவால் விடுகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது, தர்ஷன் திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

Read more: பணி செய்யும் நபர்கள் சிறப்பு எம்.பி.ஏ. படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ

English Summary

Nandini is caught in a trap.. A wise man changes the plan.. Gunasekaran challenges Sakthi.

Next Post

மாதந்தோறும் ரூ.8,000 உதவித்தொகை..!! அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்..!!யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tue Sep 30 , 2025
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]
is cash still king in upi dominated digital india v0 JY aIVehj5q7MImK6z91HCizUCQ7Hhp LFuZpWlHwgo 1

You May Like