2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா!. அறிவியல் திட்டங்கள் ரத்து!. அதிபர் டிரம்ப் அதிரடி!

NASA trump lay off 11zon

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகத்தில் சுமார் 2,145 மூத்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஊழியர்கள் GS-13 முதல் GS-15 வரையிலான பதவிகளில், மூத்த நிலை அரசாங்க பதவிகளில் உள்ளவர்கள் என்றும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே பணி ஓய்வு வழங்கியும் ஏற்கனவே ராஜினாமா செய்ய முன்வந்தவர்களை பணியில் இருந்த விடு பெற ஒப்புதல் வழங்கப்படுகிறது. தகவலின்படி, 1,818 ஊழியர்கள் தற்போது அறிவியல் அல்லது மனித விண்வெளிப் பயணம் போன்ற முக்கிய பணிப் பகுதிகளில் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் பணிபுரிகிறார்கள். இதுகுறித்து செய்தி தொடர்பாளர் பெத்தானி ஸ்டீவன்ஸ் கூறுகையில், நாங்கள் அதிக முன்னுரிமை பெற்ற பட்ஜெட்டுக்குள் செயல்படுவதால், எங்கள் பணிக்கு நாசா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Readmore: டென்னிஸ் வீராங்கனை ராதிகாவை, தந்தை ஏன் கொலை செய்தார்?. போலீசார் கூறும் திடுக்கிடும் தகவல்!.

KOKILA

Next Post

நாடு முழுவதும் ரயில்வே கேட் அமைந்திருக்கும் பகுதியில் CCTV கட்டாயம்...! அமைச்சர் அதிரடி உத்தரவு..!

Fri Jul 11 , 2025
ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும் படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒரு காரணமாக என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணம் அதிகாரிகள் […]
Indian railway 2025

You May Like