குஜாராத் மாநிலம் விஜப்பூர் பகுதியில் கெரிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மனுபாய் தாக்கூர். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.. கணவரின் தங்கையின் பெயர் ஜமுனா.. இவருக்கு தன்னுடைய அண்ணி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் தன்னுடைய அண்ணியின் கற்பை பரிசோதிக்க முடிவு செய்தார்.
இதற்காக சமையலறையில் அடுப்பில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க செய்தார். பிறகு அண்ணியை அழைத்து, அந்த கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு கற்பை நிரூபிக்க சொன்னார். கொதிக்கும் எண்ணெய்யில் கை வெந்துபோய்விட்டால், அண்ணிக்கு கற்பு இல்லை என்று அர்த்தமாம்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணி, எண்ணெய்யில் கையை விட முடியாது என்று சொல்லி உள்ளார். இதனால் நாத்தனாருக்கு மேலும் ஆத்திரம் அதிகமானது.
உடனே துணைக்கு 2 பேரை அழைத்த நாத்தனர், அண்ணியை தரதரவென கிச்சனுக்கு இழுத்து சென்று, அவரது கைகளை கொதிக்கும் எண்ணெய்க்குள் கட்டாயப்படுத்தி அழுத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல், அண்ணி அலறி துடித்தார்.. அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தையும் பெற்றனர்.. தற்போது இந்த வழக்கில் எப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது சகோதரி உள்ளிட்ட மேலும் 2 பேரை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். உடந்தையாக இருந்தவர்கள் தலைமறைவாகிவிட்டதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Read more: குதிகால் வெடிப்பு..!! நைட்ல இதை மட்டும் பண்ணுங்க..!! குழந்தைகள் பாதம் போல் மாறிவிடும்..!!



