பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே காலமானதாக பரவிய வதந்திகளுக்கு அவர் மகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் பல்வேறு தகவல்கள் தினமும் பரவி வருகின்றன.. இதில் பல தகவல்கள் உண்மையாக இருந்தாலும் சில தகவல்கள் பொய்யாக பரப்பப்படுகின்றன.. குறிப்பாக திரைப்பிரபலங்களின் மறைவு குறித்து அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சில நாட்களாக சமூக வலைதளங்களில் நாட்டின் புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.
“பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார் – ஒரு இசை சகாப்தம் முடிகிறது,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதுகுறித்து இரங்கல் தெரிவித்து வந்தனர்..
ஆனா, ஆஷா போஸ்லேவின் மகன் ஆனந்த் போஸ்லே, இந்த தகவலை மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ எனது தாய் ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக பரவும் தகவலை நம்ப வேண்டாம். இது பொய்..” என்று தெரிவித்தார்.
ஆஷா போஸ்லே சமீபத்தில் தனது கணவர், மறைந்த இசையமைப்பாளர் ராகுல் தேவ் பர்மனின் 85வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆஷா போஸ்லே திரை வாழ்க்கை
இந்தியாவின் பழம்பெரும் பாடகியான ஆஷா போஸ்லே தனது வசீகரக்குரலால் நீங்கா இடம் பிடித்துள்ளார்., ஹிந்தி, மராத்தி, பெங்காலி, தமிழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 12,000-க்கும் மேற்பட பாடல்களை அவர் பாடி உள்ளார். 1943-ம் ஆண்டு தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே,
தனது 80 ஆண்டுகால இசை வாழ்க்கையில், பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களை பாடி உள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை 2 முறை வாங்கி உள்ளார். அதுமட்டுமின்றி, 4 BFJA விருதுகள், 18 மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட 9 பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
200 ஆம் ஆண்டில், சினிமா துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது. இசை வரலாற்றில் அதிக ரெக்கார்டிங் செய்த கலைஞர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : குட்நியூஸ்… 200 மருந்துகளின் விலை குறையப்போகிறது.. புற்றுநோய் மருந்துகளும் லிஸ்ட்ல இருக்கு.. விவரம் இதோ..