பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்ற முட்டை. ஆம், முட்டையை பலர் உணவாகவே சாப்பிடுவது உண்டு. மேலும், முட்டை இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று முட்டை வெறியர்களும் பலர் உண்டு. முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைத்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். இவ்வளவு ஏன், முட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தை கூட குறைத்து விடலாம்..
இத்தனை சிறப்பு வாய்ந்த முட்டையை வைத்து டெல்லியில் உள்ள உணவு கடையின் உரிமையாளர் ஒருவர் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டியில், 31 முட்டைகளை வைத்து தயாரிக்கப்படும் ஒரு முழு ஆம்லேட்டை வெறும் 30 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அக்கடையின் உரிமையாளர் ராஜிவ் பாய் கூறியுள்ளார்.